அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணமோசடி செய்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் உதவியாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் வாங்கி ஏமாற்றியதாக தலைமைச் செயலக அலுவலர் ரவி மீது ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த முத்துலட்சுமி என்பவர் புகார் அளித்துள்ளார்.
அதன் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார், ரவியை கைது செய்துள்ளார். மேலும் இதில் தரகராக செயல்பட்ட விஜய் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட ரவி, அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்கு உதவியாளராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.