ரூ. 42 ஆயிரத்தைத் தாண்டிய தங்கம் விலை! மக்கள் அதிர்ச்சி!!
சென்னையில் ஒரு சவரன்(22 காரட்) தங்கத்தின் விலை 42 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.
சென்னையில் ஒரு சவரன்(22 காரட்) தங்கத்தின் விலை 42 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.
தங்கம் விலை கடந்த சில மாதங்களாகவே அதிகரித்துக் காணப்படுகிறது. நேற்று ஒரு சவரன் தங்கம் விலை ரூ. 42 ஆயிரத்தை நெருங்கிய நிலையில் இன்று மேலும் அதிகரித்துள்ளது.
இன்று (சனிக்கிழமை) காலை நிலவரப்படி, 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.11 உயர்ந்து ரூ.5,251 ஆகவும், ஒரு சவரன் ரூ. 88 உயர்ந்து ரூ.42,008-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதேநேரம், வெள்ளியின் விலையில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிராம் ரூ.70- க்கும், ஒரு கிலோ ரூ.70,000 -க்கும் விற்பனை செய்யப்படுகிறது.