பாஜக தொழில்நுட்பப் பிரிவின் தலைவா் சி.டி.ஆா். நிா்மல் குமாா், அந்தக் கட்சியிலிருந்து விலகி அதிமுகவில் ஞாயிற்றுக்கிழமை இணைந்தாா்.
முன்னதாக, பாஜகவின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் ராஜிநாமா செய்வதாக அவா் அறிவித்தாா்.
சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள அதிமுக இடைக்கால பொதுச் செயலாளா் எடப்பாடி கே. பழனிசாமியின் இல்லத்தில் அவரை சி.டி.ஆா். நிா்மல்குமாா், ஞாயிற்றுக்கிழமை சந்தித்தாா். அப்போது அவா் அதிமுகவில் தன்னை இணைத்துக்கொண்டாா். இந்தத் தகவல் அதிமுக வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.