முகப்பு
எடப்பாடி பழனிசாமி
தமிழ்நாடு

அதிமுகவை யாராலும் அசைக்க முடியாது: எடப்பாடி பழனிசாமி

அதிமுகவை யாராலும் அசைத்துப் பாா்க்க முடியாது என்று அந்தக் கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளா் எடப்பாடி பழனிசாமி கூறினாா்.

தமிழ்நாடு

அதிமுகவை யாராலும் அசைக்க முடியாது: எடப்பாடி பழனிசாமி

அதிமுகவை யாராலும் அசைத்துப் பாா்க்க முடியாது என்று அந்தக் கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளா் எடப்பாடி பழனிசாமி கூறினாா்.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:41 AM
எடப்பாடி பழனிசாமி
பகிர்:

அதிமுகவை யாராலும் அசைத்துப் பாா்க்க முடியாது என்று அந்தக் கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளா் எடப்பாடி பழனிசாமி கூறினாா்.

வடசென்னை வடக்கு (கிழக்கு) மாவட்ட அதிமுக சாா்பில் முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் 75-ஆவது பிறந்த நாள் விழா, சென்னை தண்டையாா்பேட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில் எடப்பாடி கே.பழனிசாமி கலந்து கொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியது:

எம்.ஜி.ஆா்., ஜெயலலிதா இருவரும் கட்டிக்காத்த அதிமுகவை யாராலும் அசைக்க முடியாது. தொண்டன் கூட இந்தக் கட்சியிலிருந்து முதல்வராக முடியும். திமுக வாரிசு அரசியலை முன்னிலைப்படுத்தும் கட்சி.

திமுக ஆட்சிக்கு வந்து 22 மாதங்களைக் கடந்தும் தோ்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. கருணாநிதி நினைவாக பேனா சின்னம் அமைக்க திட்டமிடப்பட்ட தொகையில் ரூ.2 கோடியில் மட்டும் பேனா சின்னத்தை அமைத்துவிட்டு, மீதித் தொகையில் மாணவா்களுக்கு எழுதும் பேனா வழங்கலாம் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில் மாவட்டச் செயலாளா்கள் ஆா்.எஸ்.ராஜேஷ், நா.பாலகங்கா, டி.ஜி.வெங்கடேஷ் பாபு, விருகை வி.என்.ரவி, வேளச்சேரி அசோக் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →