தமிழ்நாடு

தொடர்ந்து 3வது நாளாக 42 ஆயிரத்தில் நீடிக்கும் தங்கம் விலை!

DIN

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சற்று குறைந்துள்ள நிலையில் மீண்டும் 42 ஆயிரத்தில் நீடித்து வருகிறது. 

தங்கம் விலை அவ்வப்போது ஏற்ற இறக்கங்களைக் கண்டுவருவது தொடர்ந்து நிகழ்ந்து வரும் ஒன்றாக இருந்தாலும், கடந்த வாரம் சரிவு ஏற்பட்ட நிலையில், இரண்டு நாள்களாக மீண்டும் உயர்ந்து வருகிறது. 

இந்நிலையில், மார்ச் 6ம் தேதி காலை நிலவரப்படி, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.1 குறைந்து ரூ.5,250 ஆகவும், ஒரு சவரன் ரூ.8 குறைந்து ரூ.42,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதேசமயம், வெள்ளியின் விலையும் சற்று உயர்ந்துள்ளது. கிராமுக்கு ரூ.60 உயர்ந்து ஒரு கிராம் ரூ.70.60 ஆகவும், ஒரு கிலோ ரூ.600 உயர்ந்து ரூ.70,600 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 

உலக அளவில் பணவீக்கம், இறக்குமதி வரி, உள்ளிட்ட பல காரணங்கள் தங்கத்தின் விலையில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயில்வே அமைச்சர் பதவி விலக எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்!

மேற்கு வங்க ரயில் விபத்துக்கு முக்கிய காரணம் இதுதான்: அதிர்ச்சி தகவல்!

மேற்கு வங்க ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு நிவாரணம்!

ரிஷப் பந்த்தின் சிறந்த ஆட்டம் இனிதான் வரவுள்ளது: இஷாந்த் சர்மா

”முஸ்லிம்கள், யாதவர்களுக்கு உதவ மாட்டேன்”: பிகார் எம்.பி.

SCROLL FOR NEXT