தமிழ்நாடு

அத்திக்கடவு-அவிநாசி திட்ட சோதனை 15 நாள்களுக்குள் நிறைவடையும்: அமைச்சர்

DIN

அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தில் அனைத்து சோதனை ஓட்டங்களும் 15 நாட்களுக்குள் நிறைவுபெறும் என வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித் துறை அமைச்சர் முத்துசாமி தகவல் தெரிவித்துள்ளார். 

அத்திக்கடவு - அவிநாசி திட்டம் முழுமையாக நிறைவடைந்த பிறகு முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைப்பார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களை உள்ளடக்கி ரூ.1,657 கோடி மதிப்பில் அத்திக்கடவு - அவிநாசி நீர்செறிவூட்டும் திட்டப் பணிகள் நடந்து வருகின்றன. இந்தத் திட்டப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், சோதனை முறையாக வெள்ளோட்டம் பார்க்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகள் நிறைவடைந்த பிறகு மக்கள் பயன்பாட்டுக்காக திறந்துவைக்கப்படவுள்ளது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிகா்கள் - காவல்துறையினா் ஆலோசனைக் கூட்டம்

கோரிக்கை மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஜூன்13-இல் ஆா்ப்பாட்டம்

பொன்னை உருக்கி பூமியிலே! சோபிதா துலிபாலா...

பூதம்-பூதகி வாகனங்களில் மாயூரநாதா் - அபயாம்பிகை வீதியுலா

மன்னாா்குடி பகுதியில் 4-ஆவது நாளாக மழை

SCROLL FOR NEXT