தமிழ்நாடு

பொதுப்பாதை ஆக்கிரமிப்பு: இறந்தவர் உடலை வைத்து உறவினர்கள் போராட்டம்

மணப்பாறை அடுத்த மருங்காபுரியில் பொதுப்பாதை ஆக்கிரமிக்கப்பட்டு இருப்பதால் இறந்தவர் உடலை வைத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

DIN

மணப்பாறை அடுத்த மருங்காபுரியில் பொதுப்பாதை ஆக்கிரமிக்கப்பட்டு இருப்பதால் இறந்தவர் உடலை வைத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த மருங்காபுரி ஒன்றியம் கரடிப்பட்டி தெற்கிகளத்தில் வசித்து வந்த  எழுவது வயது மூதாட்டியான ஆவியம்மாள் வயது முதிர்வு காரணமாக உயிரிழந்தார்.

இந்த நிலையில், அவரது இறுதி சடங்குகள் இன்று அப்பகுதியில் நடைபெற்றது. அதனை தொடர்ந்து ஆவியம்மாளின் உடல் மயானத்திற்கு எடுத்துச் செல்லும் நிலையில் அப்பகுதியில் உள்ள பொதுப்பாதையில் தனி நபர்கள் ஆக்கிரமிப்பு செய்து மண் குவித்து வைக்கப்பட்டிருந்ததால் பிரயோதத்தை எடுத்துச் செல்ல முடியாமல் உறவினர்கள் தவித்து வருந்தனர்.

அதனைத் தொடர்ந்து ஆவியம்மாளின் உடலை சாலையில் வைத்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதன் காரணமாக துவரங்குறிச்சியில் இருந்து கஞ்சநாயக்கன்பட்டி செல்லும் சாலையில் தற்போது போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தகவலின் பெயரில் நிகழ்விடத்திற்கு சென்றுள்ள வருவாய்த்துறை மற்றும் காவல் துறையினர்  விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கன்னித்தீவு... ஆன் ஷீத்தல்!

இன்ப அதிர்ச்சி... ஐஸ்வர்யா!

பிகாரில் மூன்றாவது அணியை அமைக்க ஓவைசி மும்முரம்: பிற கட்சிகளுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை!

கருப்பு, வெள்ளை... அஸ்லி மோனலிசா

நினைவுகள்... சுதா

SCROLL FOR NEXT