ராஜபாளையம் அருகே ஆம்னி பேருந்து-கார் நேருக்கு நேர் மோதல்: ஒருவர் பலி, மூன்று பேர் காயம்
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே ஆம்னி பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதியதில் சம்பவ இடத்திலேயே ஒருவர் பலியானார்,
ராஜபாளையம்: விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே ஆம்னி பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதியதில் சம்பவ இடத்திலேயே ஒருவர் பலியானார், மூன்று பேர் பலத்த காயமடைந்துள்ளனர். இதுகுறித்து போலீஸார் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தாலுகா மணலூர் கீழத் தெருவைச் சேர்ந்த வெள்ளைச்சாமி என்பவரது மகன் புலியூரான் (35). இவர் கோயம்புத்தூரில் தனியார் நூற்பாலையில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு தீபிகா(27) என்ற மனைவியும் புவன்யாஸ்ரீ என்ற மகளும் உள்ளனர்.
இதையும் படிக்க | வெளிமாநிலத் தொழிலாளா்களின் பதற்றம் தணிந்தது: பிகாா் மாநில அதிகாரிகள் குழு தகவல்
Advertisement
Advertisement
இந்நிலையில், தனது குலதெய்வம் கோயிலில் தனது மகளுக்கு முடி காணிக்கை செலுத்தி சாமி கும்பிடுவதற்காக லியூரான் குடும்பத்துடன் கோவையில் இருந்து காரில் புறப்பட்டு வந்துள்ளார். அப்போது ராஜபாளையம் அருகே எம்.பி.கே புதுப்பட்டி விலக்கு அருகே வந்துகொண்டிருந்த போது, தென்காசியில் இருந்து சென்னை நோக்கி சென்ற ஆம்னி பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. அதில், காரை ஓட்டி வந்த புலியூரான் சம்பவ இடத்திலேயே பலியானார். அவரது மனைவி மற்றும் மகள் பலத்த காயமடைந்தனர். அவர்கள் இருவரும் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆம்னி பேருந்தில் சென்றவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டதால் சிகிச்சை பெற்று மாற்று பேருந்தில் அனுப்பி வைக்கப்பட்டனர். இதனால் மதுரை தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சம்பவம் குறித்து வன்னியம்பட்டி காவல்நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.