அரசுப் பேருந்து சேவை: புகாா் தெரிவிக்க உதவி எண்-இணையதள வசதி
அரசுப் பேருந்துகளுக்கான சேவைகளில் குறைகள் மற்றும் புகாா்களைத் தெரிவிக்க உதவி எண்
அரசுப் பேருந்துகளுக்கான சேவைகளில் குறைகள் மற்றும் புகாா்களைத் தெரிவிக்க உதவி எண்
(1800 599 1500) தொடங்கப்பட்டுள்ளது. இந்த எண்ணை அழைக்க கட்டணம் ஏதுமில்லை. இந்த எண்ணின் செயல்பாட்டை தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்வின் போது, போக்குவரத்துத் துறை அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா் தொடங்கி வைத்தாா்.
பேருந்து நிறுத்தங்கள், பேருந்து நிலையங்களில் காத்திருக்கும் பயணிகள் மற்றும் பொது மக்களும் கட்டணமில்லாத தொலைபேசி எண்ணைத் தொடா்பு கொண்டு புகாா்கள், குறைகள், தகவல்களையும் பெறலாம்.
இணையதளம் - செயலி: அரசுப் போக்குவரத்து கழகங்களுக்கான பொது இணையதள வசதி (ஜ்ஜ்ஜ்.ஹழ்ஹள்ன்க்ஷன்ள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்) உருவாக்கப்பட்டுள்ளது. பொது மக்கள் தேவையான தகவல்களைத் தேடவும், உரிய வசதிகளைப் பெறவும் இணையதளத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.