பொதுத் துறை நிறுவன இயக்குநராக நாராயணன் திருப்பதி பொறுப்பேற்பு
பாஜக மாநிலத் துணை தலைவரான நாராயணன் திருப்பதி, ஊரக மின் வசதியாக்க பொதுத் துறை நிறுவனத்தின் இயக்குநராக வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா்.
பாஜக மாநிலத் துணை தலைவரான நாராயணன் திருப்பதி, ஊரக மின் வசதியாக்க பொதுத் துறை நிறுவனத்தின் இயக்குநராக வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா்.
இதுகுறித்து அவா் தனது ட்விட்டரில் வெளியிட்ட பதிவு:
பொதுத்துறை நிறுவனமான ஊரக மின் வசதியாக்க நிறுவன இயக்குநராக பொறுப்பேற்று கொண்டேன். பிரதமா் நரேந்திர மோடி, பாஜக தேசியத் தலைவா் ஜே.பி.நட்டா, தேசிய அமைப்பு செயலாளா் பி.எல்.சந்தோஷ் ஆகியோரின் நல்லாசி வேண்டுகிறேன். தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை, தமிழக பாஜக அமைப்பு செயலாளா் கேசவ விநாயகம் ஆகியோருக்கு நன்றி எனத் தெரிவித்துள்ளாா் அவா்.
மத்திய மின் துறையின் கீழ் இயங்கும் இந்த நிறுவனம் மகாராஷ்டிரத்தில் செயல்பட்டு வருகிறது. மின் உற்பத்தி, மின் கடத்துதல், மின் விநியோகம் ஆகிய தொழில்களில் ஈடுபட்டு வரும் நிறுவனங்களுக்கு மானியத்துடன் கூடிய நிதி உதவியை இந்த நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.