முகப்பு
தமிழ்நாடு

இந்திய கம்யூ. நிர்வாகி கொலையில் குற்றம்சாட்டப்பட்டவர் வெட்டிக் கொலை!

கூத்தாநல்லூர் அருகே, இந்திய கம்யூனிஸ்ட் ஒன்றியச் செயலாளர் நடேச தமிழார்வன் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

Updated On : 10 மார்ச் 2023, 8:53 pm IST
வெட்டி கொலை செய்யப்பட்ட ராஜ்குமார்.
பகிர்:

கூத்தாநல்லூர்: திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் அருகே, இந்திய கம்யூனிஸ்ட் ஒன்றியச் செயலாளர் நடேச. தமிழார்வன் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

நீடாமங்கலம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் நடேச.தமிழார்வன், ஓராண்டுக்கு முன்பு, நீடாமங்கலம் கடைத் தெருவில் பட்டப்பகலில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

நடேச தமிழார்வன் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பூவனூரைச் சேர்ந்த ராஜ்குமார் (35) மற்றும் 5 பேர், திருவாரூர் நீதிமன்றத்திற்குச் சென்றுவிட்டு காரில், மன்னார்குடி நோக்கி வந்து கொண்டிருந்தனர். கூத்தாநல்லூர் வட்டம், கமலாபுரம் அருகே வந்த போது, எதிரே படுவேகமாக வந்த கார், இவர்களது காரின் மீது மோதியுள்ளது. ஓட்டுநர் காரை நிறுத்தி விட்டு இறங்கியபோது, காரின் முன்இருக்கையில் அமர்ந்திருந்த ராஜ்குமாரும் இறங்கியுள்ளார். அதேநேரத்தில், எதிரே வந்த காரில் இருந்து 7, 8 பேர் ஆயுதங்களுடன் இறங்கி ராஜ்குமாரை துரத்தியுள்ளனர். ராஜ்குமார் அருகில் இருந்த வீட்டுக் கேட்டை திறந்து உள்ளே நுழைந்துள்ளார். அப்போது, ராஜ்குமாரின் தலை, கழுத்து, கை என சரமாரியாக அவர்கள் வெட்டியுள்ளனர். இதில், சம்பவ இடத்திலேயே ராஜ்குமார் உயிரிழந்தார்.

Advertisement

Advertisement

தகவல் அறிந்த, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் டி.பி.சுரேஷ்குமார் மற்றும் போலீஸார் விரைந்து வந்து, பிரேதத்தைக் கைப்பற்றி, திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments