தமிழ்நாடு

பூஜையின்போது அம்மன் காலடியில் படமெடுத்து நின்ற பாம்பு! வைரல் விடியோ

DIN

கோவை: வேலாண்டிபாளையம் புற்றுக்கண் மாரியம்மன் கோயில் பூஜையின்போது அம்மன் காலடியில் நாகப்பாம்பு ஒன்று படமெடுத்து நின்றுள்ளது. இதனை அங்குள்ள பலரும் படமெடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வைரலாக்கி வருகின்றனர்.

கோவை தடாகம் சாலை வேலாண்டிப்பாளையம் பகுதியில் மருவூர் புற்றுக்கண் மாரியம்மன் கோயில் உள்ளது. இங்கு புற்றின் முன்பு மாரியம்மன் சிலை வைக்கப்பட்டிருக்கும். அப்பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற இந்த கோயிலில் வெள்ளிக்கிழமையான நேற்று மாலை சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. அப்போது அங்கு வந்த ஒரு நாகம் அம்மன் காலடியில் படமெடுத்து நின்றுள்ளது.

இதனை கண்ட அங்கிருந்த பக்தர்கள் அவர்களது செல்போனில் படமெடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். தற்போது இந்த விடியோ வைரலாகப் பரவி வருகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாமகிரிப்பேட்டை பகுதியில் திட்டப் பணிகளை ஆட்சியா் ஆய்வு

எஸ்ஆா்வி ஆண்கள், ஹைடெக் பள்ளி மாணவ, மாணவியா் சிறப்பிடம்

பரமத்தி வேலூா் வட்டத்தில் பள்ளி வாகனங்கள் ஆய்வு

சென்னையில் ரஷ்ய கல்விக் கண்காட்சி தொடங்கியது

உதகை மலா் கண்காட்சியில் லேசா் லைட் ஷோ

SCROLL FOR NEXT