கோப்புப்படம் 
தமிழ்நாடு

மதுரை ஆவின் பால் உற்பத்தியாளர்களின் போராட்டம் வாபஸ்

மதுரை ஆவின் பால் உற்பத்தியாளர்கள் சங்கங்களின் சாா்பில் நடைபெற்ற போராட்டம் திரும்ப பெறப்பட்டது.

DIN

மதுரை ஆவின் பால் உற்பத்தியாளர்கள் சங்கங்களின் சாா்பில் நடைபெற்ற போராட்டம் திரும்ப பெறப்பட்டது.

ஆவின் நிா்வாகம் பால் கொள்முதலுக்கான விலையை உயா்த்த வேண்டும் என பால் உற்பத்தியாளா்கள் தொடா்ந்து வலியுறுத்தி வருகின்றனா்.

இந்த நிலையில், ஆவின் நிா்வாகம் பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.7 உயா்த்த வேண்டுமென கோரிக்கை விடுத்ததையடுத்து, கடந்த 1-ஆம் தேதி மாவட்ட ஆட்சியா் தலைமையில் பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டது.

அதில் உரிய முடிவு எட்டப்படாத நிலையில், சனிக்கிழமை முதல் (மாா்ச் 11) ஆவின் நிறுவனத்துக்கு பால் அனுப்பாமல், வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக, பால் உற்பத்தியாளா்கள் சங்கம், தமிழ்நாடு பால் உற்பத்தியாளா்கள் நலச் சங்கங்களின் சாா்பில் அறிவிக்கப்பட்டது.

திட்டமிட்டபடி இன்று பால் நிறுத்த போராட்டம் நடைபெற்றது. பால் உற்பத்தியாளர்களின் போராட்டத்தால் மதுரை ஆவின் நிர்வாகத்திற்கு வரக்கூடிய பால் வரத்து குறைந்தது.

பால் உற்பத்தியாளர்களுடன் ஆவின் நிர்வாகம் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதையடுத்து போராட்டம் திரும்ப பெறப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்ஐஆர் இறப்புகள்! தில்லியில் போராட்டம் நடத்த திரிணமூல் காங்கிரஸ்?

கைதி - 2 என்ன ஆனது?

ஐசிசி பேட்டிங் தரவரிசை: தெ.ஆ. கேப்டன் லாரா, ஜெமிமா அதிரடி முன்னேற்றம்! ஸ்மிருதிக்கு சரிவு!

சத்தீஸ்கரில் நக்சல்களின் ஆயுத உற்பத்திக்கூடம் அழிப்பு!

பிக் பாஸ் 9: நட்புக்கு எடுத்துக்காட்டாக மாறிய கமருதீன் - கானா வினோத்!

SCROLL FOR NEXT