முகப்பு
தமிழ்நாடு

கடலூரில் பாமக சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டம்!

என்எல்சியை கண்டித்து கடலூரில் பாமக சார்பில் இன்று முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது. 

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:43 AM
பகிர்:

என்எல்சியை கண்டித்து கடலூரில் பாமக சார்பில் இன்று முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது. 

என்எல்சி இந்தியா நிறுவனத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து, கடலூா் மாவட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சி சாா்பில் சனிக்கிழமை (மாா்ச் 11) முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்படும் என்றும் இந்த போராட்டத்துக்கு வணிகா்கள், விவசாயிகள் ஆதரவளிக்க வேண்டும் என்றும் அந்தக் கட்சியின் தலைவா் அன்புமணி ராமதாஸ் கேட்டுக்கொண்டார். 

அதன்படி கடலூரில் இன்று முழு அடைப்புப் போராட்டம் நடைபெறுகிறது. இதையொட்டி   மாவட்டம் முழுவதும் பாதுகாப்பிற்காக 7,000 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு எந்த இடையூறும் ஏற்படாத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

கடலூரில் 50% தனியார் பேருந்துகள் மட்டுமே இயக்கப்படும் சூழலில், அரசுப் பேருந்துகள் வழக்கம்போல செயல்படுவதாக மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளது. 

ழக்கம்போல இன்று கடைகளும் செயல்படும் என கடலூர் மாவட்ட ஆட்சியர் ஏற்கெனவே கூறியிருந்த நிலையில், பெரும்பாலான டீக்கடைகள், உணவகங்கள் வழக்கம்போல் திறக்கப்பட்டுள்ளன. 

மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாமகவைச் சேர்ந்த 55 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

முழு கட்டுரையைப் படிக்க →