தமிழ்நாடு

அய்யம்பட்டியில் ஜல்லிக்கட்டு விழா : காவலர் உட்பட 23 பேர் காயம்

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே அய்யம்பட்டி ஜல்லிக்கட்டு விழாவில் காவலர் உட்பட 23 பேர் காயம் அடைந்தனர்.

DIN

அய்யம்பட்டி ஸ்ரீ  வல்லடிகார சுவாமி ஏழைகாத்தம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு விழா தொடங்கி நடைபெற்று வருகிறது.

8 சுற்றுகளாக நடக்கும் விழாவில் 4  சுற்றுகள் முடிந்துள்ளன. 11 மணி நிலவரப்படி 240 காளைகள் அவிழ்த்து விடப்பட்டுள்ளன.

இந்நிலையில் தேனி மாவட்டம் கூடலூர் வடக்கு காவல் நிலையத்தை சேர்ந்த காவலர் அழகர்சாமி உட்பட மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள் என மொத்தம் 23 பேர் காயம் ஏற்பட்டுள்ளது.

இதில் 3 பேர் படுகாயம் அடைந்து தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்திய-அமெரிக்க ஒப்பந்தம்: பங்குச் சந்தையில் ஆரவாரம்; நிஃப்டி 639 புள்ளிகளுடனும், சென்செக்ஸ் 2,073 புள்ளிகள் உயர்வு!

கிராமி விருதில் வரலாற்றுச் சாதனை படைத்த கென்ட்ரிக்!

புதிய தொழில் தொடங்கிய சீரியல் நடிகை!

தங்கம் வாங்குவோர் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள்!!

குழந்தைகளுக்கு மன அழுத்தம் ஏற்படுமா? உண்மை என்ன?

SCROLL FOR NEXT