தமிழ்நாடு

பிளஸ் 2 பொதுத்தேர்வு: தமிழ் மொழித்தாளை 50,674 மாணவர்கள் எழுதவில்லை

DIN

தமிழம் மற்றும் புதுச்சேரியில் இன்று தொடங்கிய பிளஸ் 2 பொதுத்தேர்வான தமிழ் மொழித்தாளை  50,674 பேர் எழுதவில்லை என பள்ளிக் கல்வித் துறை தகவல் தெரிவித்துள்ளது.

பள்ளிகளை சேர்ந்த 8,51,303 மாணவ, மானவிகளில் 49,559 பேர் இன்று தமிழ் மொழித்தாளை எழுத வரவில்லை எனவும், தனித்தேர்வர்கள் 1,115 பேரும் இந்தத் தேர்வை எழுத வரவில்லை எனவும் பள்ளிக் கல்வித் துறை தகவல் தெரிவித்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத் தேர்வு இன்று தொடங்கியது. முதல் தேர்வாக மொழித் தாள் தேர்வு இன்று நடந்து முடிந்துள்ளது.

தேர்வு எழுதிய மாணவ, மாணவிகள், தமிழ் மொழித்தாள் தேர்வு பொதுவாக எளிமையாக இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளனர். ஆனால், ஒரு மதிப்பெண் வினாக்கள் மட்டும் சற்று கடினமாகவும் புரிந்துகொண்டு பதிலளிக்க சிரமமாக இருந்ததாகவும், அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் பெரும்பாலும் இடம்பெறவில்லை என்றும் மாணவ, மாணவிகள் தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆர்சிபி வெற்றிக்கு தோனி காரணமா? - என்ன சொல்கிறார் தினேஷ் கார்த்திக்

நரசிம்ம பெருமாள் கோயிலில் வைகாசிப் பெருவிழா தேரோட்டம்

கியாரே..!

திருச்செந்தூர் கடலில் குளிக்கத் தடை

குறுஞ்செய்தி மூலம் எச்சரிக்கை விடுத்த பேரிடர் மேலாண்மை ஆணையம்!

SCROLL FOR NEXT