வேளாங்கண்ணி பேராலயத்தில் மேகாலய முதல்வர் கன்ராட் சங்மா குடும்பத்தினருடன் பிரார்த்தனை 
தமிழ்நாடு

வேளாங்கண்ணி பேராலயத்தில் மேகாலய முதல்வர் கன்ராட் சங்மா பிரார்த்தனை

உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி பேராலயத்தில் மேகாலய மாநில முதல்வர் கன்ராட் கே சங்மா குடும்பத்தினரோடு பிரார்த்தனை செய்தார்.

DIN

நாகப்பட்டினம்: உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி பேராலயத்தில் மேகாலய மாநில முதல்வர் கன்ராட் கே சங்மா குடும்பத்தினரோடு பிரார்த்தனை செய்தார்.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி பேராலயத்தில் மேகாலய மாநில முதல்வர் கன்ராட் கே சங்மா செவ்வாய்க்கிழமை புனித ஆரோக்கிய மாதாவை தரிசனம் செய்தார்.

தில்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்த அவர், பின்னர் சென்னையில் இருந்து திருச்சி விமான நிலையம் வருகை தந்து அங்கிருந்து சாலை வழியாக காரில் வேளாங்கண்ணி வருகை புரிந்தார். அவருக்கு பேராலய அதிபர் இருதயரஜ் மற்றும் மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ் ஆகியோர் பூங்கொத்து கொடுத்தும், சால்வை அணிவித்தும் வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து பேராலயத்தில்  மனைவி மெஹ்தாப், தாய், சகோதரர்  மற்றும் குடும்பத்தினருடன் மேகாலய மாநில முதல்வர் கான்ராட் கே சங்மா மாதாவை தரிசனம் செய்தார். 

பேராலய அதிபர் இருதயராஜ் மற்றும் பங்குத்தந்தைகள் அவருக்கு புனித நீர் தெளித்து ஆசீர்வாதம் செய்தனர். தொடர்ந்து மனைவியுடன் சேர்ந்து மெழுகுவர்த்தி ஏற்றி பிரார்த்தனை செய்தார். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற  சிறப்பு திருப்பலியில் கலந்துகொண்டனர். அவர்களுக்கு பேராலயம் சார்பில் மாலை சுற்றப்பட்ட மெழுகுவர்த்தி பிரசாதமாக வழங்கப்பட்டது.

அதனை தொடர்ந்து தரிசனத்தை முடித்த மேகாலய முதல்வர், சாலை மார்க்கமாக திருச்சி விமான நிலையம் சென்று பின்னர் அங்கிருந்து, விமானம் மூலம் பெங்களூரு செல்ல இருக்கிறார். 

மேகாலய மாநில முதல்வரின் வருகையை அடுத்து நாகை மாவட்ட காவல்துறை சார்பாக வேளாங்கண்ணி பேராலயத்தில் பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாலியல் வழக்கு: பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை!

ஓவல் டெஸ்ட்டில் டிஆர்எஸ் சர்ச்சை; கள நடுவர் செய்தது சரியா?

சாலையோரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரின் சடலம்.. ராஜஸ்தானில் அதிர்ச்சி!

கட்டாய மதமாற்ற வழக்கு: கேரள கன்னியாஸ்திரிகளுக்கு ஜாமீன்

முதல்வர் மீது விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு நம்பிக்கை இல்லை: நயினார் நாகேந்திரன்

SCROLL FOR NEXT