தமிழ்நாடு

'ஆலைகளில் பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்ற வேண்டும்'

DIN

எண்ணெய் மற்றும் எரிவாயு தயாரிக்கும் தொழிற்சாலைகளின் நிர்வாகத்தினருக்கான ஒருநாள் கருத்தரங்கு சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் நடைபெற்றது. 

தமிழக அரசு மற்றும் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் மற்றும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் இணைந்து நடத்திய இந்த கருத்தரங்கில், எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்களைச் சார்ந்த 125க்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர். 

இதில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அரசு கூடுதல் தலைமை செயலர் முகம்மது நசிமுத் பேசியதாவது, தொழிற்சாலைகளில் பாதுகாப்பு கடைபிடிப்பதை ஒரு கலாசாரமாக கொள்ள வேண்டும்.

பாதுகாப்பு கொள்கைகளை அடிக்கடி ஆய்வுக் கூட்டங்கள் நடத்தி உறுதிப்படுத்த வேண்டும். தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் சிறந்த பாதுகாப்பு நடைமுறைகளை அனைத்து தொழிற்சாலைகளும் பின்பற்ற வேண்டும் எனக் குறிப்பிட்டார்.  

எண்ணெய் எரிவாயு தயாரித்து பொதுமக்களுக்கு வழங்கப்படும் வரை பல்வேறு நிலைகளில் பின்பற்றப்படும் பாதுகாப்பு வழிமுறைகள் குறித்தான பாதுகாப்பு கையேட்டினை தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநர் மு.வே. செந்தில் குமார் வெளியிட்டார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”விரைவில் தமிழக வெற்றிக் கழகத்தின் சின்னம் அறிவிப்பு?”: ரோகிணி திரையரங்க உரிமையாளருடன் நேர்காணல்

பாஜக ஆட்சியில் 10 ஆண்டுகளாக பாகுபாடு: அகிலேஷ்

கற்பித்தலும் கற்றலும்

ஈரான் அதிபர் மறைவு: நாளை துக்கநாள் அனுசரிப்பு

உதகை மலர் கண்காட்சி: மே 26-ஆம் தேதி வரை நீட்டிப்பு

SCROLL FOR NEXT