முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் ஒரே நாளில் பல இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

தமிழகத்தில் திருவண்ணாமலை உள்பட 6 சார்-பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:45 AM
பகிர்:

சென்னை; தமிழகத்தில் திருவண்ணாமலை உள்பட 6 சார்-பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

லஞ்சப் புகார் எதிரொலியாக திருவண்ணாமலை, நாகை, பொன்னேரி, தேனி, கடலூர், அரக்கோணம் ஆகிய இடங்களில் உள்ள சார்-பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

திருவண்ணாமலை சார்-பதிவாளர் அலுவலகத்தில் நடந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே, திருவண்ணாமலையில் உள்ள இணை சார்-பதிவாளர் அலுவலகம் 2ல் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தி வருகிறார்கள்.

தேனி புதிய பேருந்துநிலையம் அருகே உள்ள சார்-பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். செய்யாறு பகுதியில் உள்ள இணை சார்-பதிவாளர் அலுவலகத்திலம் சோதனை நடந்து வருகிறது.

கடலூர் மாவட்டம் ஆத்தூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திலும் சோதனை நடைபெற்று வருகிறது. அலுவலகக் கதவுகளை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் பூட்டியிருக்கிறார்கள்.

அதுபோல, கடலூர் மாநகராட்சி அலுவலகத்திலும் சோதனை நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. உள்ளே யாரும் அனுமதிக்கப்படவில்லை.

முழு கட்டுரையைப் படிக்க →