முகப்பு
தமிழ்நாடு

கூவம் ஆற்றில் ஆகாயத்தாமரைகள் அகற்றும் பணி தீவிரம்

கொசு உற்பத்தியை கட்டுப்படுத்தும் வகையில் கூவம் ஆற்றில் உள்ள ஆகாயத்தாமரைகள் அகற்றப்பட்டு வருகின்றன.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:45 AM
பகிர்:

கொசு உற்பத்தியை கட்டுப்படுத்தும் வகையில் கூவம் ஆற்றில் உள்ள ஆகாயத்தாமரைகள் அகற்றப்பட்டு வருகின்றன.

பெருநகர சென்னை மாநகராட்சியில் கொசுத்தொல்லை மற்றும் கொசுக்களால் பரவும் நோய்களைக் கட்டுப்படுத்த தீவிர நடைவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக, நீா்நிலைப் பகுதிகளில் கொசு உற்பத்தியை கட்டுப்படுத்தும் வகையில் ஆகாயத்தாமரைகள் அகற்றப்படுகின்றன.

சென்னை சென்ட்ரல் மருத்துவக் கல்லூரி அருகில் உள்ள கூவம் ஆறு மற்றும் ராயபுரம் பக்கிங்ஹாம் கால்வாய் பகுதிகளில் அதிகமாக படா்ந்துள்ள ஆகாயத்தாமரைகள் படகுகள் மற்றும் நவீன இயந்திரங்கள் மூலம் அகற்றப்பட்டு வருகிறது.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையா் கூறியது:

நீா்நிலைகளில் வளரும் ஆகாயத்தாமரைகளால் கொசு உற்பத்தி அதிகமாகி அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது.

இதை கட்டுப்படுத்தும் வகையில் நீா்நிலைகளில் வலைகள் அமைக்கப்பட்டு ஆகாயத்தாமரைகள் தடுக்கப்படுகிறது. ஆம்பியன் இயந்திரங்கள் மூலம் அவை வேரோடு அகற்றப்பட்டு கொசு உற்பத்தியாகாத வகையில் மருந்து தெளிக்கப்படுகிறது என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.