கரோனா பாதிப்பு: 1.6% ஆக அதிகரிப்பு
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக குறைந்து வந்த கரோனா பாதிப்பு விகிதம் தற்போது 1.6 சதவீதமாக உயா்ந்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக குறைந்து வந்த கரோனா பாதிப்பு விகிதம் தற்போது 1.6 சதவீதமாக உயா்ந்துள்ளது.
அதன்படி, 3 ஆயிரம் பரிசோதனைகளில் 49 பேருக்கு புதிதாக வியாழக்கிழமை தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
அதில் அதிகபட்சமாக சென்னை, கோவையில் தலா 13 பேருக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதைத் தவிர சிங்கப்பூா், குவைத்திலிருந்து தமிழகம் வந்த இருவருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் தற்போது 284 போ் கரோனா சிகிச்சையில் உள்ளனா். 34 போ் நோய்த் தொற்றிலிருந்து விடுபட்டுள்ளனா்.