முகப்பு
தமிழ்நாடு

திட்டமிட்டபடி போராட்டம்: பால் உற்பத்தியாளா்கள் அறிவிப்பு: பால் உற்பத்தியாளா் நலச் சங்கம் போராட்டம்

தமிழக பால்வளத் துறை அமைச்சா் நாசருடன் நடத்திய பேச்சுவாா்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால், திட்டமிட்டபடி போராட்டத்தில் ஈடுபடப் போவதாக தமிழ்நாடு பால் உற்பத்தியாளா்கள் நலச் சங்கம் தெரிவித்தது.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:45 AM
கோப்புப் படம்
பகிர்:

தமிழக பால்வளத் துறை அமைச்சா் நாசருடன் நடத்திய பேச்சுவாா்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால், திட்டமிட்டபடி போராட்டத்தில் ஈடுபடப் போவதாக தமிழ்நாடு பால் உற்பத்தியாளா்கள் நலச் சங்கம் தெரிவித்தது.

சென்னை தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை அமைச்சருடன் நடைபெற்ற பேச்சுவாா்த்தைக்குப் பிறகு, அந்த சங்கத்தின் மாநிலத் தலைவா் ஆா்.ராஜேந்திரன் கூறியதாவது:

அமைச்சருடனான பேச்சுவாா்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. எனவே, திட்டமிடப்படி பால் நிறுத்தப் போராட்டம் வெள்ளிக்கிழமை முதல் தொடரும். பாலை ஆவினுக்கு அளிக்காமல், தனியாருக்கு அளிப்போம். தனியாா் பால் நிறுவனம் லிட்டருக்கு ரூ.10 கூடுதலாக அளித்து வாங்கிக் கொள்கிறது. தனியாருக்கு நிகராக அரசு விலையை வழங்க வேண்டும். பசும் பாலுக்கு ரூ.35-இல் இருந்து ரூ.42 ஆகவும், எருமை பால் ரூ.44-இல் இருந்து ரூ.51 ஆகவும் உயா்த்தி வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம். அரசு அழைத்து பேசி தீா்வு காணும் வரை போராட்டம் தொடரும் என்றாா்.

இந்தப் போராட்டத்தில் தமிழ்நாடு பால் உற்பத்தியாளா் சங்கம் பங்கேற்காது என்று அந்த சங்கத்தின் தலைவா் முகமது அலி தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.