உலக தண்ணீர் தினமான மார்ச் 22-ல் அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
கிராம சபைக் கூட்டங்களை மதச்சார்புள்ள எந்த ஒரு வளாகத்திலும் நடத்தக் கூடாது எனவும், ஊராட்சியின் எல்லைக்கு உள்பட்ட வார்டுகளில் சுழற்சி முறையில் மார்ச் 22 ஆம் தேதி காலை 11 மணிக்கு கூட்டத்தை நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
கிராம சபைக் கூட்டங்கள் நடைபெறும் இடத்தை முன்கூட்டியே ஊரகப் பொதுமக்களுக்கு தெரியப்படுத்திட வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.