முகப்பு
தமிழ்நாடு

மேட்டூர் அணை நிலவரம்!

மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதால், அணையிம் நீர்மட்டம் குறைந்துள்ளது.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:46 AM
கோப்புப்படம்
பகிர்:

மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதால், அணையிம் நீர்மட்டம் குறைந்துள்ளது.

மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக திறக்கப்படும் நீரின் அளவு நேற்று காலை முதல் வினாடிக்கு 1000 கன அடியிலிருந்து, வினாடிக்கு 1500 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் இன்று அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1223 கன அடியில் இருந்து 905 கன அடியாக குறைந்தது. அணைக்கு வரும் நீரின் அளவை விட குடிநீருக்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் மேட்டூர் அணை நீர்மட்டம் 103.44 அடியிலிருந்து 103.38 அடியாக சரிந்தது. 

மேட்டூர் அணையின் நீர் இருப்பு 69.29 டி.எம்.சியாக உள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →