தமிழ்நாடு

நடக்க கூடாதது நடந்துவிட்டது: திருச்சி சிவாவை சந்தித்த பிறகு அமைச்சர் நேரு பேட்டி

DIN

நடக்க கூடாதது நடந்துவிட்டதாக திருச்சி சிவாவை சந்தித்த பிறகு அமைச்சர் நேரு தெரிவித்துள்ளார்.

திருச்சி கண்டோன்மென்ட்டில் உள்ள இல்லத்தில் திமுக எம்பி திருச்சி சிவாவை, அமைச்சர் கேஎன் நேரு சந்தித்தார். இந்த சந்திப்புக்கு பிறகு அமைச்சர் நேரு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், நடக்க கூடாதது நடந்துவிட்டது. சிவா வீட்டில் எனக்கு தெரியாமல் நடந்து விட்டன. தகவல் பரிமாற்றத்தில் ஏற்பட்ட தவறால் இவ்வாறு நடந்துவிட்டது. இனி இது போன்ற சம்பவம் நடக்காது. சிவாவை நேரில் சென்று பார்த்து சமாதானம் செய்துவிட்டு வருமாறு முதல்வர் கூறினார். 

இருவரும் மனம் விட்டு பேசி விட்டோம் என்றார். சிவாவின் கார், வீட்டு வாசலில் இருந்த பொருட்களை நேருவின் ஆதரவாளர்கள் சேதப்படுத்திய நிலையில் இந்த சந்திப்பு நடைபெற்றது. திருச்சியில் அமைச்சா் கே.என். நேருவுக்கு, கருப்புக் கொடி காட்டியதாகக் கூறி அமைச்சரின் ஆதரவாளா்கள் மாநிலங்களவை உறுப்பினா் திருச்சி என். சிவா வீட்டில் புதன்கிழமை தாக்குதல் நடத்தினா். இதில், வீட்டிலிருந்த வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. 

தாக்குதலில் வீட்டிலிருந்த உதவியாளா்களும், ஆதரவாளா்களும் காயமடைந்தனா். இந்தச் சம்பவம் தொடா்பாக, 5 போ் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா். இந்தச் சம்பவத்தின்போது வெளிநாடு சுற்றுப்பயணம் சென்றிருந்த என். சிவா, வியாழக்கிழமை திருச்சிக்கு திரும்பினாா். தாக்குதலில் சேதப்படுத்தப்பட்ட வாகனங்கள், பொருள்களை அவா் பாா்வையிட்டாா். வீட்டிலிருந்த உதவியாளா்கள், உறவினா்களிடம் சம்பவம் குறித்து கேட்டறிந்தாா். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’முஸ்லிம்’ வார்த்தையை நீக்கிய தூர்தர்ஷன்!

வேட்பாளர்களும் வழக்குகளும்!

கொடைக்கானலில் 61 வது மலர் கண்காட்சி,கோடை விழா தொடங்கியது

கேப்டன்சியில் அசத்தும் பாட் கம்மின்ஸ்!

பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம் அண்ணியா இது!

SCROLL FOR NEXT