தமிழ்நாடு

சேலம் மத்திய சிறையில் காவலர்கள் திடீர் சோதனை: தடை செய்யப்பட்ட பொருட்கள் பறிமுதல்

DIN

சேலம் மத்திய சிறையில் நூற்றுக்கும் மேற்பட்ட காவலர்கள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கஞ்ஜா, பீடி, சிகரெட், செல்போன் சார்ஜர் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

சேலம் மத்திய சிறையில் கடந்த சில நாள்களுக்கு முன்பு குண்டாஸ் வழக்கில் கைது செய்யப்பட்ட சிறை கைதிகள் மூன்று பேர் செல்போனை பயன்படுத்தியது தெரிய வந்தது. இந்த நிலையில் செல்போனை சிறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து சிறைத்துறை உயரதிகாரி உத்தரவின் பேரில்,  சேலம் மத்திய சிறைச்சாலை கண்காணிப்பாளர் தமிழ்ச்செல்வன் மற்றும் சேலம் மாநகர காவல் துணை ஆணையர் மாடசாமி தலைமையில் காவலர்கள் வெள்ளிக்கிழமை காலை சேலம் மத்திய சிறைச்சாலையில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது கைதிகளின் அறையில்  செல்போன், கஞ்சா, பீடி, சிகரெட் மற்றும் செல்போன் சார்ஜர் உள்ளிட்ட பொருள்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். 

சிறை வளாகத்தில் தடை செய்யப்பட்ட பொருள்கள் வந்தது குறித்து சிறை காவலர்களிடம் போலீசார் மற்றும் சிறை கண்காணிப்பாளர் தமிழ்செல்வன் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மிகவும் பாதுகாப்பான தடை செய்யப்பட்ட பகுதியாக விளங்கும் மத்திய சிறை வளாகத்தில் வெளிமார்க்கெட்டில் அன்றாடம் கிடைக்கும் தடை செய்யப்பட்ட பொருள்கள் சிறைவளாகத்தில் சுலபமாக கிடைகப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 நாள் ஏற்றத்துக்கு முற்றுப்புள்ளி: சென்செக்ஸ் 118 புள்ளிகள் சரிவு

தேசிய இரட்டையா் ஸ்குவாஷ்: ஜோஷ்னா, அபய்க்கு தங்கம்

வெளியேறினாா் நடப்பு சாம்பியன் மெத்வதெவ்

பிரணாய் அதிா்ச்சித் தோல்வி

ஷாா்ஜா மாஸ்டா்ஸ் செஸ்: அா்ஜுனுக்கு முதல் வெற்றி

SCROLL FOR NEXT