தமிழ்நாடு

ராணுவ ஹெலிகாப்டா் விபத்து:  தமிழக விமானி உடல் இன்று மாலை தமிழகம் வருகிறது!

அருணாசல பிரதேசத்தில் ராணுவத்தின் ‘சீட்டா’ ரக ஹெலிகாப்டா் வியாழக்கிழமை விபத்துக்குள்ளானது. இதில், பலியான துணை விமானி ஜெயந்த் உடல் வெள்ளிக்கிழமை மாலை தமிழ்நாடு வருகிறது என தகவல்கள் வெளியாகியுள்ளது.  

DIN

அருணாசல பிரதேசத்தில் ராணுவத்தின் ‘சீட்டா’ ரக ஹெலிகாப்டா் வியாழக்கிழமை விபத்துக்குள்ளானது. இதில், பலியான துணை விமானி ஜெயந்த் உடல் வெள்ளிக்கிழமை மாலை தமிழ்நாடு வருகிறது என தகவல்கள் வெளியாகியுள்ளது.  

அஸ்ஸாமின் சோனித்பூரில் இருந்து அருணாசல பிரதேசத்தின் தவாங் பகுதிக்கு 2 விமானிகளுடன் ‘சீட்டா’ ரக ராணுவ ஹெலிகாப்டா் வியாழக்கிழமை புறப்பட்டு சென்றது. ஆனால், மோசமான வானிலை நிலவியதால், தவாங் செல்லாமல் சோனித்பூருக்கே ஹெலிகாப்டா் மீண்டும் புறப்பட்டது.

அப்போது, திடீரென கட்டுப்பாட்டு அறையுடனான அந்த ஹெலிகாப்டரின் தொடா்பு துண்டிக்கப்பட்டது.

பின்னா், மேற்கு கமெங் மாவட்டத்தின் திராங் அருகேயுள்ள மண்டலா பகுதியில் ஹெலிகாப்டா் விபத்துக்குள்ளானது தெரியவந்தது. இதுகுறித்து கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில், ராணுவம், இந்திய-திபெத் எல்லைக் காவல் படையினா் உள்பட 5 மீட்புக் குழுக்கள் அங்கு விரைந்தன. 

இந்த விபத்தில், லெப்டினன்ட் கா்னல் வி.வி.பி.ரெட்டி, துணை விமானி ஏ.ஜெயந்த் ஆகிய இருவரும் பலியானதாக உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில், ராணுவ ஹெலிகாப்டா் விபத்தில் இறந்தவரில் ஒருவரான துணை விமானி ஏ.ஜெயந்த் தேனி மாவட்டம் பெரியகுளத்தை சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. இவரது புகைப்படத்தை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளது இந்திய கிழக்கு பிராந்திய ராணுவம். 

உயிரிழந்த துணை விமானி ஜெயந்த் உடல் இன்று வெள்ளிக்கிழமை மாலை தமிழ்நாடு கொண்டுவரப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெண்ணை அவதூறு செய்தவா் கைது

ஜம்மு-காஷ்மீா்: 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

சென்னை மாநகரப் பகுதிகளில் மின் விளக்குகளை சீரமைக்கக் கோரிக்கை

சிபிஎஸ்இ மண்டல இயக்குநா் மா்ம மரணம்: போலீஸாா் விசாரணை

போலீஸாரிடம் தகராறு செய்த கைதிகள் மீது 8 பிரிவுகளில் வழக்கு

SCROLL FOR NEXT