தமிழ்நாடு

தங்கம் விலை அதிரடி உயர்வு: எவ்வளவு தெரியுமா?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் (22 காரட்) விலை சனிக்கிழமை அதிரடியாக சவரனுக்கு ரூ.880 உயர்ந்து ரூ.44,480-ஆக விற்பனை செய்யப்படுகிறது. 

DIN


சென்னையில் ஆபரணத் தங்கத்தின் (22 காரட்) விலை சனிக்கிழமை அதிரடியாக சவரனுக்கு ரூ.880 உயர்ந்து ரூ.44,480-ஆக விற்பனை செய்யப்படுகிறது. 

தங்கம் விலை கடந்த சில மாதங்களாகவே அதிகரித்து வந்தது.  கடந்த 6 ஆம் தேதி ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ. 42 ஆயிரத்தைத் தாண்டிய நிலையில் சற்று குறைந்து மீண்டு தொடர்ந்து அதிகரித்து வந்தது. 

இந்நிலையில், சனிக்கிழமை (மார்ச் 18) அதிரடியாக சவரனுக்கு ரூ. 880 அதிகரித்து ஒரு சவரன் தங்கம் ரூ. 44,480- ஆக விற்பனை செய்யப்படுகிறது. 

ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.110 அதிகரித்து ரூ.5,560 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோல், 24 கேரட் தங்கம் பவுனுக்கு ரூ.960 அதிகரித்து ரூ.48,520  ஆக விற்பனையாகிறது.

அதேநேரம், வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.1.30 அதிகரித்து ரூ.74.40 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.1,300 அதிகரித்து ரூ.74,400 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

சனிக்கினமை விலை (ரூபாயில்)
1 கிராம் தங்கம்................................ 5,560
1 பவுன் தங்கம்............................... 44,480
1 கிராம் வெள்ளி............................. 74.40
1 கிலோ வெள்ளி............................. 74,400

வெள்ளிக்கிழமை விலை  (ரூபாயில்)
1 கிராம் தங்கம்................................ 5,450
1 பவுன் தங்கம்............................... 43,600
1 கிராம் வெள்ளி............................. 73.10
1 கிலோ வெள்ளி............................. 73,100

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்திய சினிமாவிலேயே பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா!

டெஸ்ட்டில் வரலாற்றுச் சாதனை நிகழ்த்திய நியூசி. வீரர் டெவான் கான்வே!

நேஷனல் ஹெரால்டு அமலாக்கத் துறையால் ஜோடிக்கப்பட்ட வழக்கு: ப.சிதம்பரம்

தென்னாப்பிரிக்கா: துப்பாக்கிச் சூட்டில் 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி!

15 புதிய அரசு பேருந்துகள்! கொடியசைத்து துவக்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் | நெல்லை | DMK

SCROLL FOR NEXT