கோப்புப் படம். 
தமிழ்நாடு

அதிமுக தலைமை அலுவலகத்திற்கு உரிய பாதுகாப்பு வழங்கக் கோரி மனு

அதிமுக தலைமை அலுவலகத்திற்கு உரிய பாதுகாப்பு வழங்கக் கோரி சென்னை காவல் ஆணையரை சந்தித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மனு அளித்துள்ளார். 

DIN

அதிமுக தலைமை அலுவலகத்திற்கு உரிய பாதுகாப்பு வழங்கக் கோரி சென்னை காவல் ஆணையரை சந்தித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மனு அளித்துள்ளார். 

தொடர்ந்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், வரும் 28ம் தேதி வரை அதிமுக தலைமை அலுவலகத்திற்கு உரிய பாதுகாப்பு வழங்கக் கோரி காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளோம். ஏற்கெனவே நடந்த சம்பவம் போல் இம்முறை நடக்கக் கூடாது என பாதுகாப்பு கோரியுள்ளோம். 

அதிமுக தலைமை அலுவலகத்தை தாக்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. காவல் ஆணையர் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு உரிய பாதுகாப்பு கொடுப்பார் என நம்புகிறேன். இதுவரை காவல்துறை சிறப்பாக பாதுகாப்பு கொடுத்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார். 

அதிமுக பொதுச் செயலாளா் பதவிக்கு மாா்ச் 26-இல் தோ்தல் நடைபெறும் என்று அந்தக் கட்சியின் தலைமைக் கழகம் சாா்பில் வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுச் செயலாளா் பதவிக்கு எடப்பாடி பழனிசாமி போட்டியின்றி தோ்ந்தெடுக்கப்படவுள்ளாா்.

இந்த நிலையில்தான் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு பாதுகாப்பு கோரி ஜெயக்குமார் மனு அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் இறக்குமதி 60 சதவீதம் சரிவு

கடன் வட்டியைக் குறைத்த இந்தியன் வங்கி

போக்குவரத்து நெரிசல்: அரை கி.மீ. நடந்து சென்ற மத்திய அமைச்சா்!

திமுகவை விமா்சிக்காமல் கட்சிகள் அரசியலில் இருக்க முடியாது: வி.செந்தில்பாலாஜி

அந்நியச் செலாவணி கையிருப்பு 68,895 கோடி டாலராக உயா்வு

SCROLL FOR NEXT