முகப்பு
தமிழ்நாடு

நீதி கிடைக்க துணை நிற்போம்: மல்யுத்த வீரர்கள் போராட்டத்துக்கு மு.க. ஸ்டாலின் ஆதரவு

தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மல்யுத்த வீரர்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆதரவு தெரிவித்துள்ளார். 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:53 PM
முதல்வர் மு.க.ஸ்டாலின் (கோப்புப் படம்)
பகிர்:


தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மல்யுத்த வீரர்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆதரவு தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சுட்டுரைப் பதிவில், இந்தியாவுக்கே பெருமை தேடித்தந்த நமது மற்போர் வீரர்கள் பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாகி, சுயமரியாதையைக் காப்பாற்றிக் கொள்ளப் போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதைக் கண்டு நெஞ்சம் பதைக்கிறது. 

மல்யுத்த வீரர்களை திமுக மாநிலங்களவை உறுப்பினர் புதுகை அப்துல்லா இன்று தி.மு.க சார்பில் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளார். நமது  வீரர்களுக்கு நீதி கிடைக்க உறுதுணையாக உடன் நிற்போம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் முன்னாள் தலைவா் பிரிஜ் பூஷண் சரண் சிங் மீதான பாலியல் புகாா், மிரட்டல் குற்றச்சாட்டுகள் தொடா்பாக பஜ்ரங் புனியா, வினேஷ் போகட், சாக்ஷி மாலிக் உள்ளிட்ட மல்யுத்த நட்சத்திர வீரா்களும் வீராங்கனைகளும் தில்லி ஜந்தா் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

முழு கட்டுரையைப் படிக்க →