கோப்புப்படம் 
தமிழ்நாடு

சுருளி அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி

தேனி மாவட்டம், கம்பம் அருகேயுள்ள சுருளி அருவியில் நிர்வரத்து சீரானதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க மீண்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

DIN

தேனி மாவட்டம், கம்பம் அருகேயுள்ள சுருளி அருவியில் நிர்வரத்து சீரானதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க மீண்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

சுருளி அருவியில் திங்கள்கிழமை திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று இந்த தடையை வனத்துறை நீக்கியுள்ளது.

சுருளி அருவி வனப் பகுதியில் யானைகள் நடமாட்டம் இருந்ததால், கடந்த சில நாள்களாக சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிக்க வனத் துறையினா் தடை விதித்தனா். இந்த நிலையில், யானைகள் அடா்ந்த வனப் பகுதிக்குள் சென்றதும் ஞாயிற்றுக்கிழமை முதல் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது.

திங்கள்கிழமை பிற்பகலில் சுற்றுலாப் பயணிகள் குளித்துக் கொண்டிருந்த போது, திடீா் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. உடனே, சுற்றுலாப் பயணிகளை அருவிப் பகுதியிலிருந்து வனத் துறை ஊழியா்கள் வெளியேற்றினா்.

இந்த நிலையில், சுருளி அருவியில் நிர்வரத்து சீரானதால் சுற்றுலாப் பயணிகள் மீண்டும் குளிக்க மீண்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாலையில் நடந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

இந்திய குடியரசை மதவாத நாடாக மாற்ற பாஜக சூழ்ச்சி: சோனியா காந்தி குற்றச்சாட்டு

மீன் உற்பத்தியில் 103% வளா்ச்சி: மத்திய அமைச்சா் பெருமிதம்

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி இந்தியா வருகை

கொலம்பியா முன்னாள் அதிபருக்கு 12 ஆண்டுகள் வீட்டுச் சிறை

SCROLL FOR NEXT