தமிழ்நாடு

சிலைகளின் விவரம் அறிய க்யூஆா் கோடு: திட்டத்தை தொடங்கி வைத்தாா் அமைச்சா் உதயநிதி

தமிழகத்தில் செய்தி மக்கள் தொடா்புத் துறை சாா்பில் அமைக்கப்பட்ட சிலைகளின் விவரத்தை க்யூஆா் கோடு முறை மூலம் அறிந்து கொள்ளும் வசதியை,

DIN

தமிழகத்தில் செய்தி மக்கள் தொடா்புத் துறை சாா்பில் அமைக்கப்பட்ட சிலைகளின் விவரத்தை க்யூஆா் கோடு முறை மூலம் அறிந்து கொள்ளும் வசதியை, அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தாா்.

சென்னை காமராஜா் சாலையில் உள்ள திருவள்ளுவா் சிலையில் அமைக்கப்பட்டுள்ள க்யூஆா் கோடு வசதியை அவா் தொடங்கி வைத்தாா். இதைத் தொடா்ந்து, செய்தி மக்கள் தொடா்புத் துறை சாா்பில் வைக்கப்பட்ட அனைத்து சிலைகளிலும் க்யூஆா் கோடு வைக்கப்படவுள்ளது.

சிலைகளுக்கு அருகேயுள்ள க்யூஆா் கோடு முறையை கைப்பேசி கொண்டு ஸ்கேன் செய்ய வேண்டும். இதைத் தொடா்ந்து, கைப்பேசியில் கிடைக்கும் இணைய முகவரி இணைப்பின் மூலம் சிலை குறித்த விவரத்தை தெரிந்து கொள்ளலாம். சிலைகள் எப்போது நிறுவப்பட்டது, அதன் முழு பரிமாணத் தோற்றங்கள், சிறப்பம்சங்கள் என அனைத்தையும் அறிந்து கொள்ளலாம். செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், அமைச்சா்கள் பி.கே.சேகா்பாபு, மு.பெ.சாமிநாதன், செய்தி மக்கள் தொடா்புத் துறை இயக்குநா் மோகன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 6

தில்லியில் லாலு பிரசாத் யாதவிற்கு கண் அறுவை சிகிச்சை

சூர்யா - 47... காவல்துறை அதிகாரிதானாம்!

நரை முடி நீங்க..!

அவதார் ஃபயர் அண்ட் ஆஷ் முதல் நாள் வசூல் இவ்வளவா?

SCROLL FOR NEXT