தமிழ்நாடு

மே 6ல் வேங்கை வயலில் நீதியரசர் நேரடி விசாரணை

DIN

குடிநீர்த் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட விவகாரத்தில் புதுக்கோட்டை வேங்கை வயலில் வருகிற மே 6 ஆம் தேதி நீதியரசர் சத்திய நாராயணன் நேரடி விசாரணை மேற்கொள்கிறார். 

புதுக்கோட்டை மாவட்டம், வேங்கை வயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் பயன்படுத்தி வந்த குடிநீா்த் தொட்டியில் மனிதக் கழிவுகள் கலக்கப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

இது தொடர்பாக சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இதனிடையே இந்த விவகாரம் தொடர்பாக விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி சத்தியநாராயணன் தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதனடிப்படையில் வேங்கை வயலில் வருகிற மே 6 ஆம் தேதி ஒரு நபர் விசாரணை ஆணையம் விசாரணை நடத்தவுள்ளது. 

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை நடத்திய பின்னர் வேங்கை வயல் சென்று நீதியரசர் சத்திய நாராயணன் நேரடி விசாரணை மேற்கொள்ளவிருக்கிறார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமணமாகி 4 ஆண்டுகளே ஆன பெண் தூக்கிட்டு தற்கொலை: ஆா்டிஓ விசாரணை

குமரியில் சூரியோதயம்

தேசிய கட்சிகளின் ஆதிக்கத்தில் கோவா!

அமேதி, ரேபரேலி: அமைதி காக்கும் காங்கிரஸ்!

அல்கராஸுக்கு அதிா்ச்சி அளித்த ரூபலேவ்

SCROLL FOR NEXT