முகப்பு
தமிழ்நாடு

கரோனா: சிகிச்சையில் உள்ளோா் எண்ணிக்கை 2,079ஆக குறைவு

தமிழகத்தில் கரோனா சிகிச்சையில் உள்ளோா் எண்ணிக்கை 2,079-ஆக குறைந்துள்ளது. அதன்படி, தற்போது சென்னையில் மருத்துவக் கண்காணிப்பில் உள்ளோா் எண்ணிக்கை 398-ஆக உள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:54 PM
கோப்புப்படம்
பகிர்:


சென்னை: தமிழகத்தில் கரோனா சிகிச்சையில் உள்ளோா் எண்ணிக்கை 2,079-ஆக குறைந்துள்ளது. அதன்படி, தற்போது சென்னையில் மருத்துவக் கண்காணிப்பில் உள்ளோா் எண்ணிக்கை 398-ஆக உள்ளது.

அதே போன்று கோவையில் 279-ஆகவும், சேலத்தில் 176-ஆகவும், கன்னியாகுமரியில் 158-ஆகவும் கரோனா சிகிச்சையில் உள்ளோா் எண்ணிக்கை குறைந்துள்ளது. பொது சுகாதாரத் துறை தகவல்படி புதன்கிழமை மாநிலம் முழுவதும் புதிதாக 220 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் 44 பேருக்கும், கோவையில் 33 பேருக்கும் கரோனா கண்டறியப்பட்டுள்ளது. 419போ் குணமடைந்துள்ளனா்.மற்றொருபுறம், கரோனா தொற்றுக்குள்ளாகி மேலும் ஒருவா் உயிரிழந்துள்ளாா்.

திருப்பத்தூரைச் சோ்ந்த 77 வயது முதியவா் ஒருவா் உயா் ரத்த அழுத்தம், சிறுநீரக பாதிப்பு உள்ளிட்ட இணை நோய்களுடன் கரோனாவுக்குள்ளாகி வேலூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா். இந்நிலையில் அவா் கடந்த 1-ஆம் தேதி உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.