தமிழ்நாடு

சேலம் அருகே கார் மீது லாரி மோதி விபத்து!

சேலம் கருப்பூர் பொறியியல் கல்லூரி அருகே கிருஷ்ணகிரியில் இருந்து கேரளாவிற்கு நண்பர்களுடன் சுற்றுலா சென்ற கார் - டிப்பர் லாரி மோதி விபத்துக்குள்ளானது. 

DIN

சேலம் கருப்பூர் பொறியியல் கல்லூரி அருகே கிருஷ்ணகிரியில் இருந்து கேரளாவிற்கு நண்பர்களுடன் சுற்றுலா சென்ற கார் - டிப்பர் லாரி மோதி விபத்துக்குள்ளானது. 

கிருஷ்ணகிரி மாவட்டம் நாட்றம்பாளையம் பகுதியைச் சேர்ந்த கிரிஸ்டோபர் மற்றும் பெரியநாயகம் மற்றும் ஓசூர் பகுதியைச் சேர்ந்த பிரதீப் மற்றும் இரண்டு நண்பர்கள் என ஐந்து நபர்கள் கேரளத்திற்கு சுற்றுலா செல்வதற்காக கிருஷ்ணகிரியில் இருந்து காரில் சென்றுள்ளனர். 

சேலம் மாவட்டம் கருப்பூர் இன்ஜினியரிங் கல்லூரி அருகே பெங்களூரு சேலம் தேசிய நெடுஞ்சாலையில் டிப்பர் லாரியை முந்த முயன்ற போது டிப்பர் லாரி, கார் மீது மோதி கார் நசுங்கி விபத்துக்குள்ளானது.

இதில் கிறிஸ்டோபர் மற்றும் பெரியநாயகம் இருவரும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கிறிஸ்டோபருக்கு உடல் பாகம் சிதறி நிலையில் மீட்கப்பட்டுள்ளார். மேலும், காரில் பயணித்த மூன்று நபர்கள் சிறு காயத்துடன் மீட்கப்பட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து தொடர்பாக கருப்பூர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நண்பர்களுடன் கேரளா சுற்றுலா செல்ல வந்தவர்கள் விபத்துக்குள்ளாகி இருவர் உயிருக்கு போராடும் நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆன்லான் ஹெல்த்கேர் பங்குகள் 1% உயர்வு!

சத்தீஸ்கரில் 5 நக்சல்கள் கைது! வெடிகுண்டுகள் பறிமுதல்!

வெள்ளம் பாதித்த மாநிலங்களுக்கு சிறப்பு நிதி: பிரதமருக்கு கோரிக்கை

கீர்த்தி சுரேஷ், மிஷ்கின் நடிக்கும் புதிய படம்!

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை புறநகர் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் மழை!

SCROLL FOR NEXT