தமிழ்நாடு

நியாயவிலைக் கடைகளில் பணம் இல்லையென்றாலும் பொருள்கள் வாங்கலாம்

நியாயவிலைக் கடைகளில் பணம் செலுத்த, க்யூஆர் குறியீடு முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முதல்கட்டமாக 602 நியாயவிலைக் கடைகளில் இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

DIN

நியாயவிலைக் கடைகளில் பணம் செலுத்த, க்யூஆர் குறியீடு முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முதல்கட்டமாக 602 நியாயவிலைக் கடைகளில் இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

அதாவது, தமிழகத்தில் முதல்முறையாக 602  நியாய விலைக் கடைகளில் பொதுமக்கள், பொருள்களைப் பெற பணமில்லா பரிமாற்ற பரிவர்த்தனை ( க்யூஆர் கோடு ) நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் பணப்பரிமாற்றத்தைக் குறைத்து, எண்ம முறையில் பரிமாற்றத்தை மேம்படுத்த மத்திய, மாநில அரசுகள் முயன்று வருகின்றன. அதன் ஒரு நடவடிக்கையாக, தமிழகத்தில் முதல் முறையாக நியாயவிலைக் கடைகளில் க்யூஆர் கோடு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தற்போது, நடைபாதை கடை முதல் மிகப்பெரிய வணிக வளாகங்கள் வரை மின்னணு பண பரிவர்த்தனையே நடைபெற்று வருகிறது. இதனால், எப்போதும் கையில் பணம் வைத்திருக்க வேண்டிய அவசியமில்லாமல் போனது.

இந்த வசதியை கூட்டுறவு துறை நியாய விலைக் கடைகளுக்கும் கொண்டு வர முடிவு செய்து, அதனை முதல் கட்டமாக 602 நியாயவிலைக் கடைகளில் அறிமுகப்படுத்தியிருக்கிறது. 

அதன்படி, தமிழ்நாட்டில் முதன்முறையாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 602 கூட்டுறவு நியாய விலை கடைகளில் பொதுமக்கள் வாங்கும் பொருள்களுக்கு பணம் மாற்றம் மூலம் பரிவர்த்தனை மேற்கொள்ளும் வகையில் க்யூஆர் கோட் முறையினை கூட்டுறவு சங்கங்களை பதிவாளர் சண்முகசுந்தரம் காஞ்சிபுரம் எம்.வி.எம்.பி. நகரில் அமைந்துள்ள நியாய விலை கடையில் துவக்கி வைத்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்க படை வீரர்களுக்கு தலா ரூ. 1.60 லட்சம் கிறிஸ்துமஸ் பரிசு! டிரம்ப் அறிவிப்பு

அமெரிக்க வரிவிதிப்பால் பாதிப்பு: மோடிக்கு ஸ்டாலின் கடிதம்!

கிறிஸ்துமஸ்: நெல்லை - தாம்பரம் சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கியது!

மார்கழி சிறப்பு! அர்த்தநாரீஸ்வரர் கோயில் மரகத லிங்க தரிசனம்!!

மேஷ ராசிக்கு உதவி கிடைக்கும்: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT