சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு மதுரை வைகையாற்றில் கள்ளழகர் வெள்ளிக்கிழமை காலை பச்சைப்பட்டு உடுத்தி இறங்கினார்.
பக்தர்கள் விண்ணதிர கோவிந்தா கோவிந்தா என முழங்க வைகையாற்றில் கள்ளழகர் எழுந்தருளினார்.
சித்திரைத் திருவிழா கடந்த 2 ஆம் தேதி கள்ளழகருக்கு காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது.
மே 3 மாலை கள்ளழகர் வேடத்தில் தங்கப் பல்லக்கில் எழுந்தருளி மதுரையை நோக்கி புறப்பட்டார். பொய்கைக்கரைப்பட்டி, கள்ளந்திரி, அப்பன்திருப்பதி, சுந்தரராஜன்பட்டி, கடச்சனேந்தல் வழியாக வந்த கள்ளழகர் வியாழக்கிழமை(மே 4) காலை 6 மணிக்கு மூன்றுமாவடிக்கு வந்தார். அங்கு பக்தர்கள் அவரை வரவேற்கும் விதமாக எதிர்சேவை வழங்கினர்.
கள்ளழகர் எந்தநிற பட்டுடுத்தி ஆற்றில் இறங்குவார் என லட்சக்கணக்கான பக்தர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், பச்சை பட்டுடுத்தி கள்ளழகர் வைகையாற்றில் இறங்கினார். இதனால், நாடு செழிப்படையும் என்பது நம்பிக்கை.
மீனாட்சி சுந்தரேஸ்வரர் கல்யாணத்தைக் காண அழகர் மலையில் இருந்து கள்ளழகர் கோலமாக இறங்கிவருவார்.
தங்கை திருமணத்தை பார்க்க முடியாத கள்ளழகர் வைகை ஆற்றில் இறாங்குவதாக ஐதீகம் கூறுகிறது.
வைகை ஆற்றின் நான்குபுறமும் பக்தர்களின் புடை சூழ்ந்துள்ள வண்ணம் கள்ளழகர் வலம் வந்தார்.
மண்டகப்படிகளில் கள்ளழகர், வீர ராகவப் பெருமாளுக்கு சிறப்பு பூஜைகளும் சிறப்பு தீபாராதனைகளும் காட்டப்பட்டன.
ஸ்ரீவில்லிப்புத்தூரில் இருந்து சூடிக்கொடுத்த நாச்சியாரான ஆண்டாளின் மாலையை அழகர் சாற்றிக்கொண்டார்.
சைவத்தையும், வைணவத்தையும் இணைக்கும் திருவிழாவான சித்திரைத் திருவிழாவால் மதுரை முழுவதும் விழாக்கோலம் பூண்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.