தமிழ்நாடு

அரசு கலை கல்லூரிகளில் சேர மே-8 முதல் விண்ணப்பிக்கலாம்

DIN

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இணையதளத்தில் மே 8-19 வரை விண்ணப்பப் பதிவு நடைபெறும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது, www.tngasa.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் விண்ணப்பப் பதிவு செய்யலாம். மாணவர்களின் தரவரிசை பட்டியல் மே 23க்குள் கல்லூரிகளுக்கு அனுப்பப்படும்.

மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட சிறப்பு பிரிவுகளுக்கான கலந்தாய்வு கல்லூரி அளவில் மே 25-29 வரை நடத்தப்படும். 

அரசு கலைக் கல்லூரிகளில் சேர முதல்கட்ட பொது கலந்தாய்வு மே30 முதல் ஜூன் 9 வரை நடைபெறும். இரண்டாம் கட்ட பொது கலந்தாய்வு ஜூன் 12 முதல் 20 வரை நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.

தமிழ்நாட்டில் மொத்தம், 164 அரசு கலை, அறிவியல் கல்லுாரிகள் செயல்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அம்பலமூலா கிராமத்தில் உலவிய கரடிகள்

‘அரசியல் கூட்டணிக்காக காவிரியை திமுக பலி கொடுக்கக் கூடாது’

ரஷிய பல்கலைக்கழகங்களில் இந்திய மாணவா்களுக்கு 8 ஆயிரம் மருத்துவ இடங்கள்

தஞ்சாவூா் மாவட்டத்தில் விடியல் பயணத் திட்டத்தில் 14.89 கோடி பயனாளிகள் பயன்

கும்பகோணம் அருகே திமுக எம்எல்ஏ-வின் உறவினா் வெட்டிக் கொலை

SCROLL FOR NEXT