முகப்பு
தமிழ்நாடு

மேட்டூர் அணை நீர்மட்டம் உயர்வு

காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு இன்று காலை வினாடிக்கு 6,595 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 12:55 PM
கோப்புப் படம்
பகிர்:

காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு இன்று காலை வினாடிக்கு 6,595 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

குடிநீருக்கு திறக்கப்படும் நீரின் அளவைவிட அணைக்கு வரும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் நேற்று காலை 101.94அடியாக இருந்தால் மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 102.25அடியாக உயர்ந்துள்ளது. 

நீர் இருப்பு 67.78 டி.எம்.சியாகஉள்ளது. மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து 6,000 கன அடிக்கு மேல் இருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →