முகப்பு
தமிழ்நாடு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.664 அதிரடியாகக் குறைந்தது! 

தங்கம் விலை சவரனுக்கு ரூ.664 அதிரடியாக இன்று குறைந்து விற்பனை செய்யப்படுகிறது. 

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 12:55 PM
பகிர்:

தங்கம் விலை சவரனுக்கு ரூ.664 அதிரடியாக இன்று குறைந்து விற்பனை செய்யப்படுகிறது. 

சென்னையில் மே 5-ம் தேதியான நேற்று தங்கத்தின் விலை வரலாறு காணாத விலையேற்றத்தைக் கண்டுள்ளது. ஒரு சவரன் ரூ.46,200 ஆக விற்பனை செய்யப்பட்டது. 

தங்கம் விலை அவ்வப்போது ஏற்ற இறக்கம் கண்டுவருவது தொடர்ந்து நிகழ்ந்து வரும் ஒன்றாக இருந்தாலும், கடந்த ஏப்ரலில் இருந்தே தொடர்ந்து ஏற்றத்துடன் இருந்து வருகிறது.

அதன்படி, சென்னையில் சனிக்கிழமையான இன்று காலை நிலவரப்படி ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.664 குறைந்து ரூ.45,536-க்கும், ஒரு கிராம் ரூ.83 குறைந்து ரூ.5,692-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

அதேபோன்று வெள்ளி விலை சற்று குறைந்துள்ளது. அதன்படி ஒரு கிராம் ரூ.1.30  குறைந்து ரூ.82.40-க்கும் கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.1,300 குறைந்து ரூ.82,400-க்கும் விற்பனையானது. 

முழு கட்டுரையைப் படிக்க →