கோப்புப்படம் 
தமிழ்நாடு

வந்தே பாரத் ரயில் மீது கல்வீச்சு: கண்ணாடிகள் சேதம்

மைசூருவில் இருந்து சென்னை சென்ற வந்தே பாரத் அதிவிரைவு ரயில் மீது அரக்கோணம் அருகே அடையாளம் தெரியாத நபர்கள் கல் வீசி தாக்கியதில் ரயில் பெட்டி  கண்ணாடிகள் சேதமடைந்தன.

DIN

மைசூருவில் இருந்து சென்னை சென்ற வந்தே பாரத் அதிவிரைவு ரயில் மீது அரக்கோணம் அருகே அடையாளம் தெரியாத நபர்கள் கல் வீசி தாக்கியதில் ரயில் பெட்டி  கண்ணாடிகள் சேதமடைந்தன. பயணிகளுக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை.

கர்நாடக மாநிலம் மைசூருவில் இருந்து சென்னைக்கு செல்லும் வந்தே பாரத் அதிவிரைவு ரயில் சனிக்கிழமை மாலை காட்பாடி மற்றும் அரக்கோணம் இடையே மகேந்திவாடி - அன்வர்திகான் பேட்டை ரயில் நிலையங்களுங்கிடையே மாலை 6 மணி அளவில் சென்றபோது அடையாளம் தெரியாத சிலர் ரயில் பெட்டி மீது கல் வீசினர். 

இதில் சி6 பெட்டியில் 75 மற்றும் 76 இருக்கைகளுக்கு அருகில் இருந்த கண்ணாடி சேதமடைந்தது. ஏதும் ஏற்படவில்லை. இச்சம்பவம் குறித்து வந்தே பாரத் அதிவிரைவு ரயிலின தலைமை ஓட்டுநர் சென்னை ரயில்வே போக்குவரத்து கட்டுபாட்டு அறைக்கு தகவல் அளித்தார். 

மேலும் தலைமை ஓட்டுநரின் புகாரை பெற்ற அரக்கோணம் ரயில்வே பாதுகாப்புப்படை காவல் நிலையத்தினர், இது குறித்து வழக்குப் பதிவு செய்து வந்தே பாரத் ரயில் மீது கல் வீசிய அடையாளம் தெரியாத நபர்களை தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வெற்றி உரையில் நேருவின் பேச்சை மேற்கோள்காட்டிய நியூ யார்க் மேயர் ஸோரான் மம்தானி!

பிலாஸ்பூரில் சரக்கு ரயில்- பயணிகள் ரயில் விபத்து: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு, 20 பேர் காயம்

பெண் தொழிலாளிகளின் குளியலறையில் ரகசிய கேமரா! வடமாநில இளம்பெண் கைது!

நான்கரை மணிநேரம், 100 காவலர்கள்... மாணவியைக் கண்டுபிடிக்காதது ஏன்? இபிஎஸ் கேள்வி

ஆளுங்கட்சி உறுப்பினரின் குடும்பத்தினர் மூவர் சடலமாக மீட்பு! போலீஸார் விசாரணை

SCROLL FOR NEXT