முகப்பு
தமிழ்நாடு

பிளஸ் 2 தேர்வு  முடிவு: கடலூர் மாவட்டம் 27-ஆவது இடம்!

பிளஸ் 2 தேர்வு முடிவு திங்கள்கிழமை வெளியானது. இதில் கடலூர் மாவட்டம் 27 ஆவது இடத்திற்கு பின் தள்ளப்பட்டுள்ளது.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 12:56 PM
கோப்புப் படம்.
பகிர்:



நெய்வேலி: பிளஸ் 2 தேர்வு முடிவு திங்கள்கிழமை வெளியானது. இதில் கடலூர் மாவட்டம் 27 ஆவது இடத்திற்கு பின் தள்ளப்பட்டுள்ளது.

2023 ஆம் ஆண்டு நடைபெற்ற மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வில் கடலூர் வருவாய் மாவட்டத்தில் 117 அரசு பள்ளிகள், 30 அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் 98 மெட்ரிக் மற்றும் தனியார் பள்ளிகள் உள்ளிட்ட 245 பள்ளிகளில் இருந்து 14,960 மாணவர்கள் 15,310 மாணவிகள் உள்பட்ட மொத்தம் 30,270 மாணவர் மாணவிகள் தேர்வு எழுதினார். 

இவர்களில் 13,2547 மாணவர்களும், 14612 மாணவிகளும் என மொத்தம் 27,859 தேர்ச்சி பெற்றுள்ளனர். மாவட்டத்தின் தேர்ச்சி சதவீதம் மாணவர்கள் 88.55 சதவீதம்,  மாணவிகள் 95.44 சதவீதம் மொத்த தேர்ச்சி 92.04 சதவீதம். மாவட்டத்தில் அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 87.87 சதவீதம். 

கடலூர் மாவட்டத்தில் மார்ச் 2022-ஆம் ஆண்டு நடந்த பொதுத்தேர்வில் 92.82 சதவீதமும், நிகழாண்டு 92.04 சதவீதமாக குறைந்துள்ளதை அடுத்து இந்த ஆண்டு 27-ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. 

மாவட்டத்தில் தேர்வு எழுதிய 245 பள்ளிகளில் 72 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதில் அரசு பள்ளிகள் 7, அரசு உதவி பெறும் பள்ளிகள் 3, தனியார் பள்ளிகள் 62 ஆகும்.

முழு கட்டுரையைப் படிக்க →