மேட்டூர் அணை நிலவரம்!
காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் மழை தனிந்து வருவதால் மூன்றாவது நாளாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்து வருகிறது.
காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் மழை தனிந்து வருவதால் மூன்றாவது நாளாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்து வருகிறது.
தற்போது காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் மழை தனிந்துள்ளது. இதனால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு மூன்றாவது நாளாக குறைந்து வருகிறது.
இன்று காலை மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 4906 கன அடியிலிருந்து 3992 அடியாக குறைந்தது.
மேட்டூர் அணை நீர்மட்டம் 102.74 அடியிலிருந்து 102.88 அடியாக உயர்ந்துள்ளது.
அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 68.62 டிஎம்சியாக உள்ளது.