கோப்புப்படம் 
தமிழ்நாடு

234 தொகுதிகளிலும் சாதனை மாணவர்களை சந்திக்கிறார் நடிகர் விஜய்!

10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் முதல் மூன்று இடங்களைப் பிடிக்கும் மாணவ, மாணவியர்களை நேரில் சந்தித்து பரிசளிக்கவிருக்கிறார் நடிகர் விஜய். 

DIN

10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் முதல் மூன்று இடங்களைப் பிடிக்கும் மாணவ, மாணவியர்களை நேரில் சந்தித்து பரிசளிக்கவிருக்கிறார் நடிகர் விஜய். 

கடந்த திங்கள்கிழமை பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகின. 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வருகிற மே 17 ஆம் தேதி வெளியாகவிருக்கின்றன. 

இந்நிலையில் தமிழ்நாட்டில் தொகுதி வாரியாக 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ, மாணவியர்களை நேரில் சந்தித்து பரிசளிக்கத் திட்டமிட்டுள்ளார் நடிகர் விஜய். 

அதன்படி சாதனை மாணவ, மாணவியர்களை சென்னைக்கு அழைத்து வரச் செய்து நடிகர் விஜய் பரிசு வழங்க உள்ளார். 

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான பிறகு, இந்த சந்திப்பு குறித்த முழுத் தகவல் வெளியாகும் என்று கூறப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மலரே... பிரீத்தி முகுந்தன்!

திமுக கூட்டணியில் குழப்பம் இல்லை: சு. திருநாவுக்கரசா்

உலகளாவிய தயாரிப்புகளை இந்தியாவிற்கு கொண்டு வரும் பிலிப்ஸ்!

நெல்லையில் பரபரப்பு... காவல் நிலையம், சோதனைச் சாவடி அருகே பெட்ரோல் குண்டு வீச்சு!

தவெக நிர்வாகிகளை குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று கைது செய்த போலீசார்!

SCROLL FOR NEXT