கோப்புப்படம் 
தமிழ்நாடு

பள்ளி அமைச்சுப் பணியாளர்கள் பணி நேரம் மாற்றம்!

தமிழ்நாடு முழவதும் பள்ளிகளில் உதவியாளர்கள் மற்றும் இளநிலை உதவியாளர்களின் பணி நேரத்தை மாற்றியமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

DIN

தமிழ்நாடு முழவதும் உள்ள பள்ளிகளில் உதவியாளர்கள் மற்றும் இளநிலை உதவியாளர்களின் பணி நேரத்தை மாற்றியமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

பள்ளி அமைச்சுப் பணியாளர்கள் பணி நேரமானது காலை 10 மணி முதல் மாலை 5.45 வரை இருந்ததை,  காலை 9 மணி முதல் மாலை 4.45 வரை மாற்றி தமிழக அரசு  உத்தரவிட்டுள்ளது.

மேலும், கோடை விடுமுறை மற்றும் பள்ளி விடுமுறை காலங்களில் ஆசிரியரல்லாத பணியாளர்களின் வேலை நேரமானது காலை 10 மணி முதல் மாலை 5.45 வரை அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியரல்லாத பணியாளர்களின் வேலை நேரமானது  காலை 10 மணி முதல் மாலை 5.45 வரை இருந்ததால், பள்ளி வருகைப் பதிவேட்டை முடித்தல், ஆசிரியர்களின் விடுப்புகளை  குறித்தல், பிற அலுவலகப் பணிகளை மேற்கொள்வதில் நிர்வாக தொய்வு ஏற்படுவதாக தலைமை ஆசிரியர்கள், முதன்மைக்கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக்கல்வி அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் பள்ளி அமைச்சுப் பணியாளர்கள் பணி நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

யேமன் மீதான இஸ்ரேலின் தாக்குதலில்.. ஹவுதி அரசின் பிரதமர் கொலை!

அறிவழகன் இயக்கத்தில் அதிதி ஷங்கர்?

ரூ.232 கோடி மோசடி! இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தின் மேலாளர் கைது!

"வரிகள் நீக்கப்பட்டால் அமெரிக்காவிற்கு பேரழிவு!": Trump எச்சரிக்கை! | Tax | Federal Court of US

முதல்வரின் வெளிநாட்டுப் பயணங்கள்: வெள்ளை அறிக்கை எப்போது வெளியாகும்? - நயினார் நாகேந்திரன்

SCROLL FOR NEXT