முகப்பு
தமிழ்நாடு

ஒகேனக்கல் அருகே பேருந்து கவிழ்ந்து விபத்து: 50 பேர் காயம்

பென்னாகரம் அருகே ஒகேனக்கல் கனவாய் பகுதியில் தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 50-க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்துள்ளனர்.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 11:47 AM
பகிர்:

பென்னாகரம்: பென்னாகரம் அருகே ஒகேனக்கல் கனவாய் பகுதியில் தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 50-க்கும் மேற்பட்டோர் பலத்த காயத்துடன் பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு தீர்த்தகிரி நகர் பகுதியில் சேர்ந்த அரவிந்தன் (84) என்பவரின் இறுதி சடங்கிற்காக, பாலக்கோடு பகுதியில் இருந்து தனியார் பேருந்தின் மூலம் ஒகேனக்கல்லுக்கு வந்துள்ளனர். இந்த பேருந்தினை பாலக்கோடு பகுதியை சேர்ந்த ரஞ்சித் (35) ஓட்டி வந்த நிலையில், ஒகேனக்கல் கனவாய் பகுதியில் ஆஞ்சநேயர் கோயில் அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இது குறித்து தகவல் அறிந்த ஒகேனக்கல் போலீஸார் நிகழ்விடத்திற்கு வந்து பேருந்தில் பயணித்த 50-க்கும் மேற்பட்டவர்களை மீட்டு அவசர சிகிச்சைக்காக பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →