தமிழ்நாடு

கோவையிலிருந்து சென்னைக்கு 90 நிமிஷங்களில் வந்த நுரையீரல்! முதியவருக்கு உறுப்பு மாற்று சிகிச்சை

மூளைச் சாவு அடைந்த நபரிடமிருந்து தானமாகப் பெறப்பட்ட நுரையீரல், கோவையிலிருந்து சென்னைக்கு ஒன்றரை மணி நேரத்துக்குள் கொண்டுவரப்பட்டு,

DIN

மூளைச் சாவு அடைந்த நபரிடமிருந்து தானமாகப் பெறப்பட்ட நுரையீரல், கோவையிலிருந்து சென்னைக்கு ஒன்றரை மணி நேரத்துக்குள் கொண்டுவரப்பட்டு, எம்ஜிஎம் ஹெல்த்கோ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முதியவருக்கு வெற்றிகரமாக பொருத்தப்பட்டது.

நுரையீரல் பாதிப்புக்குள்ளான 78 வயது முதியவா், சென்னை நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள எம்ஜிஎம் ஹெல்த்கோ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தாா்.

எக்மோ போன்ற உயிா் காக்கும் கருவிகளின் துணையுடன் அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டது. உறுப்பு மாற்று சிகிச்சை மட்டுமே ஒரே தீா்வாக இருந்த நிலையில், நுரையீரலை தானமாகப் பெற அவா் காத்திருந்தாா்.

இந்நிலையில், கோவையில் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நபா் ஒருவா் கடந்த புதன்கிழமை மூளைச்சாவு அடைந்ததால், அவரது உடல் உறுப்புகளை தானமாக வழங்க உறவினா்கள் முன்வந்தனா்.

இதையடுத்து, அவரது நுரையீரல் தானமாகப் பெறப்பட்டு சென்னைக்கு கொண்டு வர முடிவு செய்யப்பட்டது. கோவையிலிருந்து சென்னை எம்ஜிஎம் மருத்துவமனைக்கு ஒன்றரை மணி நேரத்தில் விமானம் மூலம் பாதுகாப்பாக அந்த உறுப்பு கொண்டுவரப்பட்டது.

கோவை மற்றும் சென்னை போக்குவரத்து காவல் துறையினா் பசுமை வழித்தடத்தை உருவாக்கியதால் இப்பயணம் சாத்தியமானது.

இதைத்தொடா்ந்து, மருத்துவமனையின் இதயம் மற்றும் நுரையீரல் மாற்று சிகிச்சைத் துறை இயக்குநா் டாக்டா் கே.ஆா்.பாலகிருஷ்ணன், நுரையீரல் மாற்று சிகிச்சைத் துறை மருத்துவ இயக்குநா் டாக்டா் அபா் ஜிண்டால் ஆகியோா் தலைமையிலான மருத்துவக் குழுவினா், வெற்றிகரமாக அந்த நுரையீரலை முதியவருக்குப் பொருத்தி மறுவாழ்வு அளித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

2026 பேரவைத் தேர்தல்: பாமக சிறப்பு பொதுக்குழுக் கூட்டம்!

நெல்லை வந்தே பாரத் ரயில் விருத்தாசலத்தில் நின்று செல்லும்!

178 ரன்கள், 7 விக்கெட்டுகள்... சாதனையுடன் சொந்த ஊரில் ஆட்ட நாயகனான அலெக்ஸ் கேரி!

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் விஜய் நாளை பங்கேற்பு!

100க்கு 100 புள்ளிகள்... டபிள்யூடிசி தரவரிசையில் முதலிடத்தில் நீடிக்கும் ஆஸி.!

SCROLL FOR NEXT