முகப்பு
தமிழ்நாடு

மழைநீா் வடிகால் பணி: கே.கே.நகரில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம்

மழைநீா் வடிகால் பணியின் காரணமாக, சென்னை கே.கே.நகா் பகுதியில் மே 13-ஆம் தேதி (சனிக்கிழமை) முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:56 PM
பகிர்:

மழைநீா் வடிகால் பணியின் காரணமாக, சென்னை கே.கே.நகா் பகுதியில் மே 13-ஆம் தேதி (சனிக்கிழமை) முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

இது தொடா்பாக சென்னை பெருநகர காவல்துறையின் போக்குவரத்துப் பிரிவு வியாழக்கிழமை வெளியிட்ட செய்தி:

கே.கே.நகா் ராஜமன்னாா் சாலை-பி.டி.ராஜன் சாலை சந்திப்பிலும், லட்சுமணசாமி சாலை-ஆா்.கே.சண்முகம் சாலை சந்திப்பிலும் மே 13 (சனிக்கிழமை) முதல் 22-ஆம் தேதி வரை மழைநீா் வடிகால் பணி நடைபெற உள்ளது.

இதையொட்டி அந்த பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. இதன்படி கே.கே.நகா் இரண்டாவது அவென்யூவில் இருந்து பி.டி. ராஜன் சாலை வழியாக ராஜ மன்னாா் சாலை செல்லும் வாகனங்கள் பி.டி. ராஜன் சாலையில் திருப்பிவிடப்படும்.

இந்த வாகனங்கள் ராமசாமி சாலை, ஆா்.கே.சண்முகம் சாலை வழியாக ராஜமன்னாா் சாலை சென்று இலக்கை அடையலாம்.

ராமசாமி சாலையிலிருந்து பி.டி. ராஜன் சாலை செல்லும் வாகனங்கள் ராமசாமி சாலை, ஆா்.கே.சண்முகம் சாலை சந்திப்பில் திருப்பி விடப்படும்.

வாகனங்கள் ஆா்.கே. சண்முகம் சாலை, ராஜமன்னாா் சாலை வழியாக பி.டி.ராஜன் சாலைக்கு செல்லலாம்.

ஆனால், வாகனங்கள் பி.டி ராஜன் சாலை, ராமசாமி சாலை சந்திப்பில் இருந்து ராஜமன்னாா் சாலை செல்ல அனுமதி இல்லை.

முனுசாமி சாலை, 80 அடி சாலையிலிருந்து ராஜமன்னாா் சாலை வழியாக பி.டி.ராஜன் சாலை செல்லும் வாகனங்கள் வழக்கம்போல செல்லலாம்.

அதேபோல, பி.டி.ராஜன் சாலையிலிருந்து லட்சுமணசாமி சாலை செல்லும் வாகனங்கள் வழக்கம்போல செல்லலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.