தமிழ்நாடு

சேலம் அருகே கேளிக்கைப் பூங்காவில் நீரில் மூழ்கி சிறுவன் பலி

சேலம் அருகே கேளிக்கைப் பூங்காவில் நீரில் மூழ்கி சிறுவன் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

DIN

சேலம் அருகே கேளிக்கைப் பூங்காவில் நீரில் மூழ்கி சிறுவன் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம்  எருமாபாளையம் சாலையில் பகுதியிலுள்ள ரஞ்சித் - உஷா தம்பதியினர் தங்களது  குழந்தைகள் சௌடேஸ்வரன் (13) மற்றும் துவேஸ்வரன்(11) ஆகியோர் நேற்று மாலை சேலம் மல்லூர் பகுதியில் உள்ள தனியார்  கேளிக்கைப் பூங்காவில் விளையாடுவதற்காக சென்றுள்ளனர். 

அப்போது, தண்ணீரில் குளித்துக் கொண்டிருந்தபோது சௌடேஸ்வரனுக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. இதனையறிந்த பெற்றோர்கள் உடனடியாக அருகில் இருந்தவர்களை உதவிக்கு அழைத்தனர். தொடர்ந்து, உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் அவர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். மருத்துவர்கள்  சிறுவன் ஏற்கனவே  இறந்ததாக தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக வெண்ணந்தூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோடை விடுமுறையை கொண்டாடச் சென்ற சிறுவன் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓப்போவின் புதிய ஸ்மார்போன் இன்று அறிமுகம்! ஏ6எக்ஸ் 5ஜி

திருக்கார்த்திகை! சுவாமிமலையில் தேரோட்டம்! வடம்பிடித்து இழுத்த பக்தர்கள்!

சத்தீஸ்கரில் 12 நக்சல்கள் சுட்டுக்கொலை! 3 காவல் அதிகாரிகள் பலி!

ஹேப்பி டிசம்பர்... நிக்கி!

திருப்பரங்குன்றம் மலை மீது சிஐஎஸ்எஃப் பாதுகாப்புடன் தீபம் ஏற்ற உத்தரவு!

SCROLL FOR NEXT