முகப்பு
சேலம் நெடுஞ்சாலை நகர் இல்லத்தில் கேக் வெட்டி நிர்வாகிகளுடன் பிறந்தநாளை கொண்டாடும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி.
தமிழ்நாடு

எடப்பாடி பழனிசாமி பிறந்த நாள்: ஆயிரக்கணக்கான தொண்டர்கள் வீட்டின் முன்பு குவிந்தனர்!

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமியின் 69 ஆவது பிறந்தநாளையொட்டி அவருக்கு வாழ்த்து தெரிவிக்க ஆயிரக்கணக்கான தொண்டர்கள் அவரது வீட்டின் முன்பு குவிந்தனர். 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:56 PM
சேலம் நெடுஞ்சாலை நகர் இல்லத்தில் கேக் வெட்டி நிர்வாகிகளுடன் பிறந்தநாளை கொண்டாடும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி.
பகிர்:

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமியின் 69 ஆவது பிறந்தநாளையொட்டி அவருக்கு வாழ்த்து தெரிவிக்க ஆயிரக்கணக்கான தொண்டர்கள் அவரது வீட்டின் முன்பு குவிந்தனர். 

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது 69 ஆவது பிறந்த நாளை சேலத்தில் கட்சி நிர்வாகிகளுடன் கேக் வெட்டி  இன்று கொண்டாடினார். இதனையொட்டி சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள அவரது இல்லத்திற்கு காலை முதற்கொண்டு முன்னாள் அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். 

தொடர்ந்து சேலம் மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 69 கிலோ கேக்கினை வெட்டினார். இதேபோன்று பல்வேறு பகுதியைச் சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் கொண்டு வந்த கேக்குகளையும் வெட்டி கட்சி தொண்டகளுக்கு வழங்கினார். 

இதனைத் தொடர்ந்து அண்ணா தொழிற்சங்கத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர்கள் 125 பேர் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு சீருடை, புடவை மற்றும் இனிப்புகளை வழங்கினார்.

 அதிமுகவின் பொதுச் செயலாளர் ஆக பொறுப்பேற்ற பிறகு எடப்பாடி கே. பழனிசாமி கொண்டாடும் முதல் பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →